வெலிகம, படவல, பத்தேகம பகுதியில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் இன்று (17) காலை துப்பாக்கிச் சூடு நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மிதிகம காவல்துறையினர் தெரிவித்தனர்.
இன்று (17) அதிகாலை 2.10 அளவில் மிதிகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட பத்தேகம பகுதியில் உள்ள வர்த்தக நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டிற்கு பிஸ்டல் ரக துப்பாக்கி பயன்படுத்தப்பட்டு, ஐந்து முறை துப்பாக்கியால் சுடப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றும் துப்பாக்கிச் சூட்டில் வீட்டின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் 28, 40 மற்றும் 41 வயதுடைய மிதிகம, பத்தேகம பகுதியில் வசித்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மிதிகம மற்றும் வெலிகம காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








