“நாக சைதன்யாவின் இரண்டாவது வாழ்க்கையும் நிலைக்காதாம்.. “ஜோதிடரின் கணிப்பை பார்த்து திரையுலகமே வியந்துபோயுள்ளது.
தமிழ் சினிமாவில் சமந்தா போல் தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் தான் நடிகர் நாகர்ஜுனா.
இவரின் மகன்களில் ஒருவர் தான் நடிகர் நாக சைதன்யா. இவர் கடந்த 2017ஆம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார்.
சைத்தன்யா – சமந்தா இருவரது திருமண வாழ்க்கை சரியாக 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது.
விவாகரத்திற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், சமந்தாவுக்கு ஜீவனாம்சமாக கோடிக்கணக்கில் பணம் கொடுக்க நாக சைதன்யா தயாராக இருந்தார். ஆனால் அவற்றை வாங்காமல் சமந்தா விவாகரத்து கொடுத்து விட்டார்.

இந்த நிலையில் நாக சைதன்யா – சோபிதா துலிபாலா என்ற நடிகையை நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளார்.
இதனை நாக சைதன்யாவின் தந்தையான நாகர்ஜுனா அவருடைய X தளத்தில் புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் சமந்தா – நாக சைதன்யா விவாகரத்தை கச்சிதமாக கணித்த ஜோதிடர் வேணு சுவாமி, நாக சைதன்யாவின் புது வாழ்க்கை கூறப்போவதாக கூறியிருந்தார்.
அந்த வகையில், ஆந்திராவில் மிக பிரபலமாக இருக்கும் ஜோதிடர் வேணு, “சமந்தா மற்றும் சோபிதாவின் ஜாதகத்தில் சனியின் கவனம் செவ்வாய் பக்கம் உள்ளது. நாக சைதன்யாவின் பது மனைவியாகப்போகும் சோபிதாவின் ஜாதகத்தில் செவ்வாயின் கவனம் சுக்கிரன் மற்றும் வியாழன் மீது இருக்கிறது. 2027 ஆம் ஆண்டு வரை இருவரும் சந்தோசமாக இருப்பார்கள். பின்னர் சண்டைகள் வர ஆரம்பிக்கும்.

ஜாதகப்படி இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்த நேரமும் சரியில்லை. நாக சைதன்யா – சமந்தாவுக்கு 50 மதிப்பெண்ணும், நாக சைதன்யா – சோபிதாவுக்கு பத்து மதிப்பெண்ணையும் தருகிறேன். தொழிலில் இருவருக்கும் நன்றாகத்தான் இருக்கிறது. நாக சைதன்யாவும், சோபிதாவும் சேர்ந்து இருக்க முடியாது என்று தான் காலம் சொல்கிறது” என கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.








