கிங் கங்கை, அத்தனகலு ஓயா, களு கங்கையின் சிறிய கங்கை உப வடிநிலம் மற்றும் நில்வள கங்கை ஆகியவற்றுக்கு விடுக்கப்பட்டிருந்த வெள்ள அபாய எச்சரிக்கைகளை நீக்குவதற்கு நீர்ப்பாசன திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆற்று வடிநிலங்களில் நீர் மட்டம் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அந்த திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, குறித்த எச்சரிக்கைகள் இன்று (16) பிற்பகல் 03.00 மணி முதல் நடைமுறைக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மழைவீழ்ச்சி நிலையில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாகவும், ஆறுகளின் நீர் மட்டங்களில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பாகவும் நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு தொடர்ந்து கவனம் செலுத்தும்.

வெள்ள நிலைமை ஏற்பட்டால் அது தொடர்பில் முன்கூட்டியே அறிவிப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here