கொழும்பு – காலி பிரதான வீதியில் வடக்கு பயாகல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தனது குழந்தையைப் பார்ப்பதற்காகச் சென்ற 25 வயதுடைய மக்கொன அக்கரமலை பகுதியைச் சேர்ந்த மொஹமட் சுல்பிகார் மொஹமட் இஸ்தான் என்பவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பஸ்ஸை கடக்க முற்பட்ட போது எதிரே வந்த லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பயாகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here