ஒரு கோடியே முப்பத்தேழு இலட்சத்து எழுநூற்று அறுபத்தைந்து ரூபா பெறுமதியான 461 பெட்டி வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் பிரவேசிக்க முற்பட்ட வெளிநாட்டு பெண் உட்பட நான்கு பயணிகள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

37 வயதுடைய சீனப் பெண் மற்றும் கொழும்பில் உள்ள கிளப் ஒன்றில் பணிபுரியும் பெண், வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 29,200 சிகரெட்டுகள் அடங்கிய 146 அட்டைப்பெட்டி சிகரெட்டுகளை அவர் தனது பயணப் பையில் மறைத்து வைத்திருந்த போது சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பாணந்துறை பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய நபரும் மத்துகம பிரதேசத்தில் வசிக்கும் 38 வயதுடைய சாரதி ஒருவரும் டுபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர்.

அவர்கள் இருவரும் சட்டவிரோதமான முறையில் 39,000 சிகரெட்டுகள் அடங்கிய 195 சிகரெட் பெட்டிகளை அவர்களது பயணப் பைகளில் கண்டுபிடித்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here