ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் மல்லியப்பு பகுதியில் இன்று காலை பாரிய மரம் ஒன்று முறிந்து விழுந்ததால் அந்த வீதியின் போக்குவரத்து பணிகளுக்கு பெரும் தடை ஏற்பட்டது.

இன்று காலை 6.10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனால் அலுவலக ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக வீதியின் இரு பக்கங்களிலும் கடுமையான வாகன நெரிசல் ஏற்பட்டதோடு பல பயணிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள்.

எனினும், சம்பவத்தை அறிந்து உடனடியாக செயல்பட்ட பிரதேசவாசிகள், தோட்ட தொழிலாளர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை ஊழியர்கள் மற்றும் ஹட்டன் பொலிஸ் அதிகாரிகள் ஒன்றிணைந்து பெரும் முயற்சி எடுத்து முறிந்து விழுந்த மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

சுமார் ஒரு மணி நேர செயற்பாட்டின் பின்னர், வீதியில் ஏற்பட்ட தடை முற்றாக அகற்றப்பட்டு வீதி பழைய நிலைக்கு கொண்டு வரப்பட்டது. தற்போது வாகன போக்குவரத்து சாதாரணமாக நடைபெறுகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here