உலகப் புகழ் பெற்ற லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்திலுள்ள எம்.சி.சி. அருங்காட்சியகத்தில் சச்சின் டெண்டுல்கரின் புதிய புகைப்படம் ஒன்று நேற்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த எம்.சி.சி. அருங்காட்சியகத்தில் கிரிக்கெட்டில் சாதனைப் படைக்கும் வீரர்கள் பெயர், பெயர்ப் பலகையில் பொறிக்கப்படும்.

அத்தோடு, கிரிக்கெட் சாதனைப் படைத்தவர்கள் படங்கள் இங்கு இடம் பெற்றிருக்கும். இந்த வகையில் சச்சின் டெண்டுல்கரின் புதிய புகைப்படம் அருங்காட்சியகத்தில் நேற்றையதினம் திறந்து வைக்கப்பட்டது.

தன்னுடைய படத்தின் முன் நின்று சச்சின் டெண்டுல்கர் போஸ் கொடுத்து புகைப்படமொன்றை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here