இன்று இரவு 11.30 மணி வரை அமுலுக்கு வரும் வகையில் 19 மாவட்டங்களில் கடுமையான மின்னலுக்கான வானிலை ஆலோசனையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் கடுமையான மின்னலுடன் கூடிய இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.








