சர்வதேச சந்தை விலைகளில் ஏற்ற இறக்கங்கள் காணப்படுகிற போதிலும், ஜூன் மாதத்திற்கான எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படாது என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய மே மாதத்தில் நடைமுறையில் இருந்த விலைகளே ஜூன் மாதத்திலும் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்திற்கான எரிவாயு விலைகளுக்கமைய 12.5 கிலோ சிலிண்டர் – ரூ. 4,765 எனவும், 5 கிலோ சிலிண்டர் – ரூ. 1,910 எனவும் 2.3 கிலோ சிலிண்டர் – ரூ. 890 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here