22வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் நாளை (18) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அது தற்போது சட்டமூல நூலகத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த சட்டமூலத்தை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார அவர்கள் சமர்பிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளதுm

இதன்மூலம் நீதிமன்ற அமைப்புகள் (திருத்த) சட்டம், 1978 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க நீதிமன்ற அமைப்புகள் சட்டத்திற்கு திருத்தங்கள் சேர்க்கப்பட உள்ளன.

நாட்டின் நீதிபதிகளின் ஓய்வு வயது வரம்பை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், இதற்கு ஆரம்பம் முதலே திரிநிகாய மகாநாயக்க தேரர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், எதிர்க்கட்சிகள் மற்றும் பல சர்வதேச அமைப்புகளிடமிருந்தும் கடும் எதிர்ப்பு வெளியானது.

இந்த எதிர்ப்புகளுக்கு மத்தியில், நீதிபதிகளின் ஓய்வு வயதை நீட்டிப்பதற்கான 22வது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் கடந்த 7ஆம் திகதி வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டது.

இலங்கை பாராளுமன்றத்தில் சட்டமூலம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், அதனை உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி 14 நாட்கள் கால அவகாசம் உள்ளது.

அந்த மனுவை விசாரித்து 3 முதல் 21 நாட்களுக்குள் உச்ச நீதிமன்றம் தனது தீர்மானத்தை பாராளுமன்றத்திற்கு அறிவிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here