தற்பொழுது நாட்டில் மருந்துப்பொருட்களின் விற்பனை சுமார் 30 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக்க சான்கந்த தெற்கு ஊடகமொன்றிடம் தெரிவித்துள்ளார்.
கடும் பொருளாதார நெருக்கடிகளினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் மிகவும் அத்தியாவசியமான மருந்து வகைகளை மட்டுமே கொள்வனவு செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவ்வாறு கொள்வனவு செய்யும் மருந்து வகைகள் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு போதுமான அளவில் மட்டும் கொள்வனவு செய்யப்படுவதாக தெரிவிதுள்ளார்.
சில நோயளிகள் நாள் தோறும் பெற்றுக்கொள்ள வேண்டிய மருந்து வகைகளை இடைக்கிடை பெற்றுக்கொள்வதாகவும், மூன்று வேளை உணவு உட்கொள்ள முடியாதவர்களினால் மருந்துப்பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் மருத்துவர்கள் வழங்கும் பரிந்துரைகளுக்கு அமைய மருந்து மாத்திரைகளை பெற்றுக்கொள்ளாதிருப்பது நோயாளிகளுக்கு மரணத்தை கூட ஏற்படுத்தலாம் என அகில இலங்கை மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சந்திக்க சான்கந்த எச்சரிக்கை விடுத்துள்ளார்.