உலகப் பிரபல இணையவழி வணிக நிறுவனம் அமேசான் தனது வரலாற்றில் மிகப்பெரிய பணிநீக்கம் நடவடிக்கையை அறிவித்துள்ளது.

தொழில்நுட்பத் துறை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஆட்குறைப்புகளைச் சந்திக்கும் நிலையில், அமேசன் நிறுவனம் செவ்வாய்க்கிழமை (28) முதல் புதிய சுற்று பணிநீக்கம் நடவடிக்கைகளைத் தொடங்கும் என நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

CNBC செய்தியின்படி, இச்சுற்று பணிநீக்கத்தில் சுமார் 30,000 ஊழியர்கள் பாதிக்கப்படுவர். இது அமேசனின் மொத்த 1.55 மில்லியன் பணியாளர்களில் குறைந்த அளவாக இருந்தாலும், கார்ப்பரேட் மற்றும் நிறுவனத் தொழிலாளர்களில் சுமார் 10% பங்களிப்பாகும்.

2022 ஆம் ஆண்டில், அமேசன் இதேபோன்ற பணிநீக்க நடவடிக்கைகளை அறிவித்து 27,000 ஊழியர்கள் வேலை இழந்தனர். இந்த புதிய சுற்று நடவடிக்கை செலவினங்களை குறைப்பதற்கும், கோவிட் காலத்தில் ஏற்பட்ட அதிகபடியான பணிநீக்கத்தை சரிசெய்வதற்கும் நோக்கமாகும்.

நிறுவனம் செவ்வாய்க்கிழமை காலை தனது ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் பணிநீக்கங்கள் பற்றிய தகவலை அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதுவரை அமேசானிடமிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here