November 17, 2025
இடம்பெற்றது அஸ்வெசும” நலன்புரி பயனாளி குடும்பங்கள் வலுவூட்டல் திட்டத்தின் கலந்துரையாடல்- திருகோணமலை
உள்நாட்டுச்செய்திகள் புதிய செய்திகள்

இடம்பெற்றது அஸ்வெசும” நலன்புரி பயனாளி குடும்பங்கள் வலுவூட்டல் திட்டத்தின் கலந்துரையாடல்- திருகோணமலை

Jul 14, 2024

அஸ்வெசும” நலன்புரி பயனாளி குடும்பங்கள் வலுவூட்டல் திட்டத்தின் கலந்துரையாடலானது பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் அவர்களின் பங்குபற்றலுடன் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

எமது நாடானது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட நாடாகும். இருப்பினும் மூவின மக்களும் இணைந்து வாழக்கூடிய ஒரு மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் காணப்படுகின்றது. என்னதான் யுத்தம் காணப்பட்டாலும் மூவின மக்களிடையே எவ்விதமான முரண்பாடுகளும் பிரச்சினைகளும் இல்லாமல் வாழ்கின்ற மக்கள் என்பதை முதலில்  கூறிக்கொள்கின்றேன் என பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் கூறினார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் அஸ்வெசும பயனாளிகள் 27 லட்சம் பேர் இலங்கையில் தெரிவு செய்யப்பட்டாலும்  எமது பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு 12 லட்சம் குடும்பங்களை சக்திபடுத்துகின்ற ஒரு பாரியளவு வேலைத்திட்டமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆகவே ஒப்படைக்கப்பட்டிருக்கின்ற இவ்வேலைத்திட்டத்தை தனிய ஒரு அரசியல்வாதியாக நானோ அல்லது ஜனாதிபதியோ இணைந்து செயற்படுத்த முடியாது. 25000 இற்கும் மேற்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் காணப்படுகின்றார்கள். 12 லட்சம் குடும்பங்களை சக்திப்படுத்துவதற்கு நாங்கள் மட்டும் போதாது, அரச உத்தியோகத்தர்களும் இணைந்தால் தான் இவ்வாறான அரச கொள்கைகள், திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். ஆகவே சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கு அரச உத்தியோகத்தர்களாகிய நாம் அனைவரும் ஒன்றினைய வேண்டும். ஒன்றிணைந்தால் மாத்திரமே 12 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சக்திப்படுத்த முடியும். ஆகவே இந்த சக்திப்படுத்தலுக்காக அனைவரும் தங்களுடைய ஒத்துழைப்புக்களை வழங்க வேண்டுமென மேலும் கேட்டுக்கொண்டார்.

இதன்போது திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கபில நுவன் அத்துக்கோரள, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், துறை சார்ந்த அதிகாரிகள், துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *