Saturday, August 1, 2026
No menu items!

அஸ்வெசும

அஸ்வெசும கொடுப்பனவு;ஜூன் மாத 2ம் கட்ட பணம் தொடர்பில் அறிவிப்பு

அஸ்வெசும நலத்திட்ட கொடுப்பனவின் ஜூன் மாதத்துக்கான 2ம் கட்ட பணம் நாளை (23) முதல்  கிடைப்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 2,70,025 குடும்பங்களுக்கான 328 கோடி ரூபாய் (3,287,163,750/=) கொடுப்பனவு அஸ்வெசும பயனாளிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.

நிதியமைச்சை கடுமையாக குற்றம் சாட்டும் பொது அமைப்புக்கள்

ஏப்ரல் மாதத்தில் அஸ்வெசும பயனாளிகளுக்கு இருமுறை பணம் வழங்கப்பட்டமை தொடர்பாக நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள அறிவிப்பு, பொது நிதிக் கட்டுப்பாடு சீர்குலைந்துவிட்டதற்கான தெளிவான அறிகுறி என சுதந்திர சட்டத்தரணிகள் சங்கம் கூறியுள்ளது. அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், நிதியமைச்சின் கீழ் உள்ள நலன்புரி நன்மைகள் சபை மூலம் மேலதிகமாக சுமார் 50 கோடி ரூபாய்...

அஸ்வெசும நிவாரண உதவித்தொகை பெறுபவர்களுக்கு அறிவித்தல்!

2025 ஆம் ஆண்டுக்கான செப்டம்பர் மாதத்திற்கான அஸ்வெசும நிவாரண உதவித்தொகை நாளை மறுநாள் (12) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. 11,201,647,000.00 ரூபாய் தொகை 1,412,574 பயனாளி குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 12 ஆம்...

வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட வயோதிபர்களுக்கான உதவித் தொகை ..!

அஸ்வெசும பயனாளி குடும்பங்களில் வசிக்கும் வயோதிபர்களுக்கான மே மாத உதவித் தொகை வங்கியில் வைப்பிலிடப்பட்டுள்ளது. அந்த வகையில், குறித்த உதவித் தொகை உரிய குடும்பங்களுக்கு சொந்தமான அஸ்வெசும பயனாளி வங்கிக் கணக்குகளில் இன்று புதன்கிழமை (28.05.2025) வரவு வைக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது. அதன்படி, 592,766 பயனாளிகளுக்கு ரூ. 2,963,830,000 தொகை உரிய வங்கிக் கணக்குகளில்...

ஜூன் மாதம் முதல் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும..!

எதிர்வரும் ஜூன் மாதம் முதல் மேலும் 400,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும நன்மையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மன்னார் பகுதியில் இன்று (4/17/2025) நடைபெற்ற மக்கள் பேரணியில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார். வடக்கில் நடந்த போர் காரணமாக, மக்களின் நிலங்களை அரசாங்கம் கையகப்படுத்த வேண்டியிருந்தது என்றும், சில வீதிகள்...

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தில் திருத்தம்!

அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, நிலையற்றவர்கள் என்ற சமூக பிரிவினருக்கான உதவித்தொகை கிடைக்கின்ற காலத்தை எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நீடிக்க அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இயலாமைக்குட்பட்டவர்கள் மற்றும் சிறுநீரக சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்த உதவித் தொகையை 7,500 ரூபாவிலிருந்து 10 ஆயிரம்...

அஸ்வெசும இரண்டாம் கட்ட விண்ணப்பம் தொடர்பில் வெளியான அறிவிப்பு..!

அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை (21/1/2025) தொடங்கும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்டத்திற்காக நலன்புரி நன்மைகள் சபை சுமார் 800,000 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது. அதற்கமைய, குறித்த விண்ணப்பங்களில் இருந்து நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் நோக்கில், வீடு வீடாகச்...

குழந்தைகளுக்கு 6,000 ரூபா கொடுப்பனவு வவுச்சர்..!

அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காத குடும்பங்களைச் சேர்ந்த அனைத்து குழந்தைகளுக்கும் 6,000 ரூபா கொடுப்பனவு,வவுச்சர் வடிவில் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. பெற்றோரை இழந்த குழந்தைகள், மாற்றுத்திறனாளி தாய் அல்லது தந்தை உள்ள குடும்பங்களின் குழந்தைகள், அநாதை இல்லங்களில் படிக்கும் சிறு பிள்ளைகள் மற்றும் சிறப்புக் காரணங்களால் ஆதரவற்ற பிரிவைச் சேர்ந்த குழந்தைகளுக்கு இவ்வுதவித்தொகை வழங்கப்படவுள்ளது. இதேவேளை, பயனாளிகள்...

அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் விசேட கொடுப்பனவு..!

அஸ்வெசும திட்டத்தில் உள்வாங்கப்படாத ஏனைய தகுதியுடைய பாடசாலை மாணவர்களுக்கும் தலா 6,000 ரூபாவை வழங்குவது தொடர்பில் நிதியமைச்சு கவனம் செலுத்தி வருகிறது. இதன்படி, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அஸ்வெசும பயனாளிகளின் பிள்ளைகளுக்குப் பாடசாலை உபகரணங்களைக் கொள்வனவு செய்ய 6,000 ரூபாய் உதவித்தொகை...

கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு..!

பாடசாலைப் பயிற்சிப் புத்தகங்கள் மற்றும் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான மானியத் திட்டம் அஸ்வெசும நலன்களைப் பெறும் குடும்பங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படவில்லை என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்கபெறாத ஆனால் பொருளாதார ரீதியாக மிகவும் சிரமத்திற்கு உள்ளான பிள்ளைகளுக்கு உரிய கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அதன் செயலாளர் தெரிவித்துள்ளார். குறைந்த வருமானம் பெறும்...
- Advertisement -spot_img

Latest News

இன்று கடும் மழை மற்றும் பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை காரணமாக இன்று இலங்கையின் தென்மேற்கு பகுதிகளில் மழை,காற்றுடன் கூடிய வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்கள் மற்றும்...
- Advertisement -spot_img