நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய வானிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு முதலாம் கட்டத்தின் கீழ் விழிப்புடன் இருக்குமாறு வெளியிடப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை மேலும் நீடிக்கப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய அது நாளை (31) மாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ கோரளை பிரதேச செயலாளர் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, ஓபநாயக்க, எலபாத்த, குருவிட்ட, பெல்மடுல்ல மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கண்டி மாவட்டத்தின் உடுநுவர மற்றும் யட்டிநுவர ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, யட்டியந்தோட்டை, புலத்கொஹுபிட்டிய மற்றும் மாவனெல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது.








