இஸ்ரேல் பொதுத் தேர்தலின் அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்ட பின்னர் இறுதி ஆசன எண்ணிக்கை மாற்றமின்றி உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி 53 ஆசனங்களையும், எதிர்க்கட்சி குழு 48 ஆசனங்களையும், அரபுக் கட்சிகள் 19 ஆசனங்களையும் பெற்றுள்ளன.

பெரும்பான்மையை பெற முடியாததால் அரசாங்கம் அமைக்க எதிர்க்கட்சி குழுக்களின் ஆதரவை பெற வேண்டிய நிலை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு ஏற்பட்டுள்ளது.

அந்நாட்டில் அரசாங்கம் அமைக்க 120 ஆசனங்களில் 61 ஆசனங்களை வெல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here