Tamil News Channel

5 நிமிடத்தில் மின்சார வாகனத்தை சார்ஜ் செய்யலாம் – சீன நிறுவனத்தின் புதிய கண்டுப்பிடிப்பு..!

25-67d980f0aa60d

5 நிமிடம் மின்சார காரை சார்ஜ் 400 கிமீ பயணம் செய்யும் தொழில்நுட்பத்தை BYD நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

5 நிமிட சார்ஜ்

மின்சார வாகனத்தின் பயன்பாடு உலகளவில் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்த வாகனங்களை சார்ஜ் செய்ய அதிக நேரம் தேவைப்படும்.

இந்நிலையில், 5 நிமிடத்தில் மின்சார வாகனத்தை சார்ஜ் செய்யும் அமைப்பை சீனாவை சேர்ந்த பிரபல மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான BYD உருவாக்கியுள்ளது.

இதன் மூலம் மின்சார வாகனத்தை 5 நிமிடங்களில் சார்ஜ் செய்து அதன் மூலம் 400 கிமீ தூரத்திற்கு பயணம் செய்ய முடியும்.

இதற்காக 1000kW சார்ஜிங் திறனுடன் ‘SUPER E PLATFORM’ என்ற தொழில்நுட்பத்தை BYD நிறுவனம் உருவாக்கியுள்ளது.

இதன் போட்டி நிறுவனமான டெஸ்லா, 500kW சார்ஜிங் வேகத்தை வழங்கி வரும் நிலையில், BYD அதனை விட இரு மடங்கு வேகத்தை வழங்குகிறது.

4,000 சார்ஜிங் நிலையங்கள்

தனது Han L sedan மற்றும் Tang L SUV மாடல் வாகனங்களில் இந்த SUPER E PLATFORM தொழில்நுட்பம் இருக்கும் என BYD அறிவித்துள்ளது.

மின்சார வாகனங்களில் சார்ஜ் செய்ய அதிக நேரம் எடுக்கும் நிலையில், பெட்ரோல் வாகனங்களில் 5 நிமிடத்தில் பெட்ரோல் நிரப்புவது போல், இனி 5 நிமிடத்தில் காரை சார்ஜ் செய்ய முடியும் என BYD நிறுவனத்தின் நிறுவனர் Wang Chuanfu தெரிவித்துள்ளார்.

மேலும், சீனா முழுவதும் 4,000 க்கும் மேற்பட்ட அதிவேக சார்ஜிங் நிலையங்களை உருவாக்குவதற்கான தனது நோக்கத்தையும் அறிவித்துள்ளது.

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Posts