நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று (18) நடைபெற்ற இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக குறித்த போட்டி 15 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.
போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் பாகிஸ்தான் அணி சார்பாக சல்மன் அக்ஹா 46 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.
பதிலளித்தாடிய நியூசிலாந்து அணி 13.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்திருந்த போது வெற்றியிலக்கை அடைந்தது.







