Wednesday, July 22, 2026
No menu items!

கிரிக்கெட் போட்டி

இந்தியா–பாகிஸ்தான் போட்டி விதிமீறல் – ஐசிசி விசாரணைக்கு ஒப்புதல்!

செப்டம்பர் 14ஆம் திகதி நடைபெற்ற இந்தியா–பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது இடம்பெற்ற விதிமீறல் சம்பவம் தொடர்பில், சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) உரிய விசாரணை நடத்த ஒப்புக்கொண்டுள்ளது. இந்தியா, போட்டி முடிந்தபின் பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்க மறுத்ததற்கான குற்றச்சாட்டு எழுந்த நிலையில், போட்டி நடுவராக இருந்த எண்டி பைகிராப்ட் அதனை எதிர்க்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து...

பொறளை பகுதியை உலுக்கிய துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி, நால்வர் சிகிச்சையில்!

பொரளை, சஹஸ்புர, சிறிசர உயன பகுதியில் நேற்று இரவு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஐவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் களனியைச் சேர்ந்த 23 வயதுடையவர் எனவும் காயமடைந்த அனைவரும் 21- 23 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. காயமடைந்த மற்றைய நான்கு பேரும் கொழும்பு...

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகும் க்ளென் மேக்ஸ்வெல்!

அவுஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் க்ளென் மேக்ஸ்வெல் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார். 13 வருட ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவுக்கு கொண்டுவருவதாக அவர் இன்று திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். 149 ஒருநாள் போட்டிகளில் கிட்டத்தட்ட 4,000 ஓட்டங்களை எடுத்த மேக்ஸ்வெல், 2012 ஆம் ஆண்டு முதல் அவுஸ்திரேலியாவுக்காக விளையாடி வருகின்றார். 2022 ஆம் ஆண்டு நடந்த பயங்கரமான விபத்து ஒன்றில் இடது கால் முறிந்ததைத் தொடர்ந்து சிகிச்சை பெற்றார். இந்த நிலையில், 2027ஆம்...

பாகிஸ்தானுடன் இந்தியா இனி விளையாடாது – வெளியான அறிவிப்பு!

ஜம்மு, காஷ்மீரின் பஹல்காமில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் காரணமாக, பாகிஸ்தானுடன் இந்தியா இனி எந்த கிரிக்கெட் போட்டியிலும் விளையாடாது என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். மத்திய அரசின் நிலைப்பாடு காரணமாக இனிவரும் காலங்களில் பாகிஸ்தானுடன் இருதரப்பு போட்டிகளில் இனி இந்தியா விளையாடாது என அவர் உறுதியளித்துள்ளார். மேலும், பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத...

தசுன் சானகவிற்கு குஜராத் டைட்டன்ஸ் அணி அழைப்பு..!

நடந்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் போது காயமடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் க்ளென் பிலிப்ஸுக்கு பதிலாக இலங்கை அணியின் சகலத்துறை வீரரான தசுன் சானக அழைக்கப்பட்டுள்ளார். ஷுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, தசுன் சானகவை 75 லட்சம் இந்திய ரூபாய்க்கு (இலங்கை மதிப்பில் 2.5 கோடி...

இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் போட்டி இடம்பெறும் என அறிவிப்பு!

2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ்ஸில் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில், கிரிக்கெட் போட்டி இடம்பெறும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை உறுதிப்படுத்தியுள்ளது. குறித்த போட்டிக்கான இடமாக தெற்கு கலிபோர்னியாவின் போமோனாவில் தற்காலிகமாக மைதானம் ஒன்று கட்டப்படவுள்ளதாக போட்டி ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. லொஸ் ஏஞ்சல்ஸ் கிரிக்கெட் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் தலா ஆறு அணிகள்...

அடுத்த ஒலிம்பிக் போட்டி லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில்!

கடந்தாண்டு ஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்றது. அடுத்த ஒலிம்பிக் போட்டி 2028ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது. 2028 ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டு இடம்பெற்றுள்ளது. 128 ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி இடம்பெற்றுள்ளது. கடைசியாக 1900ஆம் ஆண்டு பாரீஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. லொஸ் ஏஞ்சல்ஸ்...

5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ள நியூசிலாந்து அணி!

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே இன்று (18) நடைபெற்ற இரண்டாவது இருபதுக்கு இருபது கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. சீரற்ற காலநிலை காரணமாக குறித்த போட்டி 15 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. போட்டியில் முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 15 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 135 ஓட்டங்களை...

9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி..!

நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 18.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 91 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. இந்தநிலையில்...

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி…

இலங்கை - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 174 ஓட்டங்களால்  வெற்றியீட்டியுள்ளது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட் இழப்பிற்கு 280 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. 281 ஓட்டங்களை...
- Advertisement -spot_img

Latest News

விவாதத்திற்கு வரும் நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை

நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை (24) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இன்று (22)...
- Advertisement -spot_img