முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் நாளையதினம் (ஞாயிறு) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அதாவது (Heat Index) ‘எச்சரிக்கை’ மட்டத்தை எட்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெப்பம் தொடர்பில் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

பொது வெளியில் வேலை செய்பவர்கள் அடிக்கடி நீர் அருந்தவும், முடிந்தவரை நிழலில் ஓய்வெடுக்கவும் அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதேநேரம் வீடுகளில் உள்ளவர்கள், வயதானவர்கள் மற்றும் நோயாளிகளை கவனித்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

மேலும் வாகனங்களில் குழந்தைகளை தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

வெளி நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் கடினமான வேலைகளை குறைத்துக்கொண்டு, நிழலை நாடி, நீரேற்றத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க இலகுவான, வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here