மாணவர்கள் மீதான பழிவாங்கல்களை உடன்நிறுத்த வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு நாட்களாக மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று (26) நிறைவு செய்துள்ளனர்.

மாணவர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாகவும் மாணவர்களின் மீதுள்ள நியாயங்களின் விளைவாகவும் இன்று நடைபெற்ற பல்கலைக்கழக பேரவைக் கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் குறித்து தீர்மானிக்கப்பட்டு, பொய்யாக புனையப்பட்ட குற்றச்சாட்டுக்களிலிருந்து மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவர்களின் பாடத்தெரிவுகள் மற்றும் மாணவர்கள் பழிவாங்கப்படுதல்கள் தொடர்பில் பல்கலைக்கழகப் பேரவை தனது கூடுதல் கவனத்தை வரும் காலத்தில் செலுத்தும் என்று உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்யும்போது பேரவை உறுப்பினர்களால் தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here