மூத்த  நடிகை சரோஜா தேவி இன்று தனது 87ஆவது வயதில் காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள இல்லத்தில் இன்று காலமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 200ற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

அத்துடன் இந்திய அரசின் உயரிய விருதுகளான பத்மபூஷன், பத்மஸ்ரீ விருதுகளையும் சரோஜா தேவி பெற்றுள்ளார்.

சரோஜா தேவியின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் 60 முதல் 70 வரையான காலகட்டங்களில் 17 வருடங்களாக முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சரோஜா தேவி.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், காதல் மன்னன் ஜெமினி கணேசன் என அப்போது முன்னணி நடிகர்களாக இருந்தவர்கள் அனைவருடனும் நடித்தவர்.

ஒரு காலத்தில் சூப்பர் ஸ்டார்களை விட அதிகம் சம்பளம் வாங்கியவர் என்ற பெருமை இவருக்கு உள்ளது.

இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். திரைத்துறையில் பிரபலமான நடிகைகளுள் இவரும் ஒருவர். இவரை கிட்டத்தட்ட 200 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இவரை கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி என பல புனை பெயர்கள் இவரது நடிப்பால் கிடைக்கப்பெற்றவை.

இவரது 14 -ம் வயதில் மகாதேவி காளிதாசா என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் 1955 -ல் திரைத்துறைக்கு அறிமுகமானார். தனது முதல் படத்திற்காகவே தேசி விருதை பெற்றவர். பின் 1958ம் ஆண்டு எம்ஜிஆர் நடித்த நாடோடி மன்னன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.

அன்பே வா, ஆசைமுகம், ஆலயமணி, பார்த்திபன் கனவு, கல்யாபாரிசு, எங்கள் வீட்டு பிள்ளை என தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து உச்ச நட்சத்திர அந்தஸ்துக்கு உயர்ந்தார் சரோஜா தேவி.

சரோஜா தேவி கர்நாடக மாநிலம் மைசூரில் ஜனவரி 7 , 1942 -ல் பிறந்தார். இவரது தந்தை போலீஸ் அதிகாரி, தாயார் வீட்டில் house wife சரோஜா தேவி தன் பெற்றோர்க்கு நான்காவது பெண் குழந்தையாகும்.

அதானல், இவரது தாத்தா இவரை யாருக்காவது தத்து கொடுத்துவிடலாம் என்று கூற, இவரது தந்தை அதனை மறுத்துவிட்டு தன் பிள்ளைக்கு நடனம் கற்க வைத்து சரோஜா தேவியின் நடிப்பு திறமைக்கு ஊக்கமளித்தார். சரோஜா தேவியின் தாயார் அவருக்கு உடை விஷயத்தில் சில கண்டிஷன்கள் போட்டுள்ளார்.

அதாவது நீச்சல் உடை, கை இல்லாத சட்டை அணிவிக்க கூடாது போன்றவை. சரோஜா தேவி தனது நடிப்பு பயணத்தின் இறுதி வரை தனது தாயாரின் வார்த்தைக்கு மதிப்பளித்துள்ளார்.

சரோஜா தேவிக்கு 1967ம் ஆண்டு மார்ச் 1ம் தேதி பாரத் எலெக்ட்ரானிக்ஸ் பொறியியலாளர் ஸ்ரீ ஹர்ஷாவுடன் திருமணம் நடந்தது.

ஆனால் ஸ்ரீஹர்ஷா 1986ம் ஆண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். சரோஜா தேவிக்கு குழந்தைகள் என்றால் புவனேஷ்வரி மற்றும் அவரது பேரக் குழந்தைகள் தான்.

சரோஜா தேவிற்கு மூன்று குழந்தைகள், அதில் புவனேஸ்வரி என்பவர் இவர் தத்து எடுத்த குழந்தை. அவரது இறப்பிற்கு பின்பு அவர் நினைவாக அவரது பெயரில்  புவனேஸ்வரி விருதுகள் என்று இலக்கியத்திற்க்காக வழங்கப்படுகிறது. இவரது மற்ற இரு குழந்தைகள் இந்திரா, இந்திரா காந்தியின் நினைவாகவும், கவுதம் ராமசந்திரன், எம் ஜி ராமச்சந்திரன் நினைவாகவும் பெயர் வைத்துள்ளார்.

தேசிய விருதுகள்

  • 2008 வாழ்நாள் சாதனையாளர்களுக்கான இந்திய அரசின் தேசிய விருது
  • 1992 பத்மபூஷன், இந்திய அரசின் தேசிய விருது
  • 1969 பத்மஸ்ரீ இந்திய அரசின் தேசிய விருது

    பிற விருதுகள்

    • 2009 ஆந்திர அரசின் என் டி ஆர் தேசியவிருது
    • 2009 கர்நாடக அரசின் ராஐகுமார் தேசியவிருது
    • 2009 நாட்டிய கலாதர் – தமிழ் சினிமா by Bharat Kalachar Chennai
    • 2007 என் டி ஆர் விருது for remarkable achievement by Karnataka Telugu Academy
    • 2007 ரோட்டரி சிவாஜி விருது by the Charitable Trust and Rotary Club of Chennai
    • 2006 பெங்களூர் பல்கலைக் கழகம் சார்பில் கெளரவ டாக்டர் பட்டம்
    • 2003 தினகரன் சாதனையாளர் விருது
    • 2001 ஆந்திர அரசின் என்டிஆர் தேசியவிருது 2001
    • 1997 எம்.ஜி.ஆர். விருது – தமிழக அரசு
    • 1997 சாதனையாளர் விருது – சினிமா எக்ஸ்பிரஸ் சென்னை
    • 1997 அனைத்து சுற்றுக்குமான சாதகமானவர் பிலிம்பேர் விருது
    • 1989 கர்நாடக அரசின் ராஜ்யோத்சவ விருது
    • 1980 கர்நாடக அரசின் அபினண்டன -காஞ்சனா மாலா விருது
    • 1965 சிறப்பு பெயராக “அபிநய சரஸ்வதி ” – கர்நாடக அரசு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here