விசேட துறைகளில் உயர் திறன்கொண்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களைப் பணியமர்த்த நிறுவனங்கள் பயன்படுத்தும் திட்டத்தில், புதிய கொள்கையைத் திணிப்பதற்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு அதிகாரம் இல்லை என்று அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதற்கமைய H-1B விசாக்களுக்கான $100,000 விண்ணப்பக் கட்டணத் தேவையை அமெரிக்க மாவட்ட நீதிபதி லியோ சொரோகின் நேற்று ரத்து செய்தார்.

குடிவரவுக் கொள்கையை மாற்றி, அத்தகைய ஒரு தேவையைச் இணைக்கும் அதிகாரம் கொங்கிரஸிற்கு மாத்திரமே உள்ளது என்றும், $100,000 விண்ணப்பக் கட்டணத் தேவையை அவர் ஒரு வரியாகக் கருதுவதாகவும், மேலும் இந்த மாற்றத்தை ஒருதலைப்பட்சமாகச் செய்வதற்குச் சட்டத்துறையினர், நிர்வாகத்திற்கு அனுமதி வழங்கவில்லை என்றும் நீதிபதி சுட்டிக்காட்டினார்.

H-1B பணி விசாக்களுக்கு 100,000 அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டும் என்ற புதிய கட்டண விதியை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் முன்வைத்தார்.

இந்த நிலையில் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

H-1B விசாக்கள், பட்டப்படிப்பு பெற்ற திறமையான வெளிநாட்டுத் தொழிலாளர்கள் 3 முதல் 6 ஆண்டுகள் வரை அமெரிக்காவில் பணிபுரிய அனுமதிக்கின்றன.

தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் பிற விசேடத் துறைகளில் உள்ள வேலைகளுக்கு நிறுவனங்கள் இந்த விசாவைப் பயன்படுத்துகின்றன.

இந்த நிலையில் ட்ரம்பின் கட்டண கோரிக்கை நீதிமன்றத்தினால் மறுக்கப்பட்டுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here