முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தன மீது தொடுக்கப்பட்ட நான்கு ஊழல் வழக்குகள் தொடர்பில் அவருக்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (09) தீர்ப்பளித்தது.

உயர் நீதிமன்ற நீதிபதி முகமது மிஹைல், இந்த வழக்குகளுக்காக மொத்தம் ரூ. 1.8 மில்லியன் அபராதமும் விதித்துள்ளார்.

2006-ஆம் ஆண்டில் அபிவிருத்தி லொட்டரி சபையின் தலைவராக பதவி வகித்த காலத்தில் அவர் செய்த ஊழல் குற்றச்சாட்டுகளில் குணவர்தன குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார்.

அந்நிறுவனத்திற்காக வாடகை அடிப்படையில் வாகனங்களைப் பெற்றுதன் மூலம் அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தி, அதன்மூலம் ஊழல் குற்றத்தைச் செய்ததாக இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு அவர் மீது குற்றம் சாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here