மன்னார் மாவட்டம் விடத்தல்தீவையைச் சேர்ந்த இளைஞர் அனுஜன், ஐரோப்பாவில் விமானி உரிமத்தைப் பெற்றுள்ள பெருமைக்குரிய செய்தி வெளியாகியுள்ளது.
அவர் தமது ஆரம்பக் கல்வியை மன்னார் லூயிஸ் முன்பள்ளியில், மேலும் தரம் 1 முதல் 3 வரை புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியில் பெற்றார்.
தற்போது, ஒரு விமானத்தில் தலைமை விமானியாக (Captain Pilot) பணியாற்றக்கூடிய மேன்மட்ட உரிமத்தை (Commercial Pilot Licence with ATPL privileges) பெற்றுள்ள அவர், தாயக மாணவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக விளங்குகிறார்.
இது, வெளிநாடுகளில் தமிழர் சாதனைகளைச் சுட்டிக்காட்டும் ஓர் சிறந்த நிகழ்வாகவும் கருதப்படுகிறது.








