நாடு முழுவதும் உடல் ரீதியாக காயமடைந்த 20 காட்டு யானைகள் தற்போது சிகிச்சை பெறுகின்றன என்று வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான யானைகள், துப்பாக்கிச் சூட்டுகளும், பொறி (trap) தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது அனுராதபுரம் வலயத்தில் 8, பொலன்னறுவை வலயத்தில் 4, வடமேல் வலயத்தில் 3 மற்றும் ஊவா வலயத்தில் 5 காட்டு யானைகள் சிகிச்சையில் உள்ளன.

இதேவேளை, திகம்பதஹ பகுதியில் உயிரிழந்த மூன்று காட்டு யானைகள் தொடர்பாக விசாரணை நடாத்துவதற்கு தேவையான உதவிகளை வழங்குமாறு பதில் பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒரே குழுவொன்று திட்டமிட்டு யானைகளை கொன்று வருவதாகவும், அதனை உடனடியாக விசாரிக்க வேண்டுமெனவும், விலங்கு நல சங்கங்களின் பிரதிநிதியான பாகொட ஜனிதவன்ச தேரர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here