இலங்கையின் ஆரம்ப சுகாதார சேவையை மேம்படுத்தும் நோக்கில், நாடு முழுவதும் 2000 புதிய ஆரம்ப சுகாதார மையங்களை நிறுவ அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

ஒவ்வொரு மையமும்  10,000 பேர் அடிப்படையாகக் கொண்டு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நேற்று முந்தினம்(26.07) இலங்கை அறக்கட்டளை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பட்டறையில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

மேலும் 2025ஆம் ஆண்டில் முதல் கட்டமாக 100 மையங்கள் நிறுவப்பட உள்ளன.

இந்த மையங்களில் மனநல பராமரிப்பு, முதியோர் சேவை, நோய்த்தடுப்பு பராமரிப்பு, வாய்வழி, முதன்மை கண் பராமரிப்பு, இளைஞர் சேவை, தேர்ந்தெடுக்கப்பட்ட ஆய்வுகள் உள்ளிட்ட பல சேவைகள் வழங்கப்படும்.

பொது சுகாதார தாதியர் அதிகாரிகளுக்கு (PHNOs) மோட்டார் சைக்கிள்கள், போக்குவரத்து கொடுப்பனவுகள் போன்ற வசதிகள் அடுத்த ஆண்டு முதல் வழங்கப்படும் என்றும், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை மருத்துவமனைகளின் நெரிசலை குறைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்த திட்டத்திற்கான நிதி சர்வதேச அமைப்புகள் மற்றும் தனியார் நன்கொடையாளர்களிடம் இருந்து பெறப்படும். மையங்கள், மக்களுக்கு நெருக்கமான இடங்களில் மட்டுமே அமைக்கப்படும் என்றும் அவர் உறுதிபட கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here