பொரளை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஐந்து பேருக்கு மேல் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த ஒரு கனரக வாகனம் (Bucket truck) பல வாகனங்களுடன் மோதியதே இந்த விபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ் விபத்து தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here