அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த இடைக்கால ஒப்பந்தம் இன்றுடன் நிறைவடையும் நிலையில் ஈரான் முக்கிய சில கோரிக்கைகளை கோடிட்டு காட்டியுள்ளது.

குறித்த கோரிக்கைகளில் மூன்று முக்கிய விடயங்களை ஈரான் குறிப்பிட்டுள்ளது.

போர் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும், ஈரான் மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தப்படாது என்பதை அமெரிக்கா உறுதி செய்ய வேண்டும் மற்றும் அமெரிக்க படைகள் ஹோர்முஸ் நீரிணையை முற்றுகையிடுவதில் இருந்து பின்வாங்க வேண்டும் என தம் கோரிக்கைகளை முன் வைத்துள்ளது.

அத்துடன் இவை மூன்றும் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அணு ஆயுத உற்பத்தி நிறுத்தம் தொடர்பில் ஈரான் குழு அமெரிக்காவுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளும் என ஈரான் தெரிவித்துள்ளது.

இதேநேரம் அணு ஆயுத உற்பத்தியை முழுமையாக நிறுத்துவதாக ஈரான் ஏற்றுக் கொண்டால் மாத்திரமே போர் நிறுத்தம் செய்யப்படும் என அமெரிக்கா தொடர்ந்தும் தெரிவித்து வருகிறது.

பாகிஸ்தான் மூலமாக ஈரான் இந்த கோரிக்கைகள் அடங்கிய அறிக்கையை வழங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here