வவுனியா இறம்பைக் குளம் மகளிர் மகா வித்தியாலயத்தின் 135 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றைய தினம்(09) நடைபெற்ற நடை பவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நடைபவணி பாடசாலை முன்றலில் இருந்து ஆரம்பமாகி வவுனியா மணிக்கூட்டு கோபுரம் சென்று, அங்கிருந்து கடைவீதி வழியாக அந்தோனியார் ஆலயத்தை சென்றடைந்து, பாடசாலை பிரதான வாயிலை சென்றடைந்தது.

பாடசாலையின் பழைய மாணவிகள், தற்போது பாடசாலையில் கற்றுவரும் மாணவிகள், பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.








