யாழ்ப்பாணம் நாகர்கோவில் வடக்கு முருகையா தேவஸ்தானத்தில் நடைபெற்ற மாம்பழத் திருவிழாவில் மாம்பழம் ஒன்று 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் செய்யப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.
மேற்படி ஆலயத்தின் கொடியேற்ற திருவிழா கடந்த 8ஆம் திகதி தொடங்கியிருந்த நிலையில், இது ஏழாம் மாம்பழத் திருவிழா ஆகும், நேற்று (14) நடைபெற்றது.
திருவிழா நிகழ்ச்சியின் போது இரவு முருகனும் விநாயகப் பெருமானும் இடையில் நடந்த போட்டியில், உலகை முதலில் சுற்றிச் செல்லும் நபருக்கு மாம்பழம் வழங்கப்படுவதாகத் தீர்மானிக்கப்பட்டது.
இதனைஅடுத்து, முருகப் பெருமான் மயில் ஏறி உலகைச் சுற்ற செல்லும்போது, விநாயகப் பெருமானும் சிவனும் உமாதேவியாரும் வலம் வந்து மாம்பழத்தை பெற்றுக்கொண்டனர்.
மாம்பழம் ஏலத்தில், முதலில் 10,000 ரூபாய்க்கு ஆரம்பித்து சில நொடிகளில் 6 இலட்சம் ரூபாய், பின்னர் படிப்படியாக உயர்ந்து சில நிமிடங்களில் இறுதியாக 10 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டுள்ளது.







