இந்தியாவில் இருந்து MV Express என்ற அதிசொகுசு சுற்றுலாப் பயணிகள் கப்பல், இன்று (15) யாழ்ப்பாணம் வருகை தரவுள்ளதாக காங்கேசன் துறைமுக அத்தியட்சர் த. பகீரதன் தெரிவித்தார்.
10 தளங்களைக் கொண்ட இந்த பிரமாண்ட கப்பலில் சுமார் 1,391 சுற்றுலாப்பயணிகள் பயணம் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 584 ஊழியர்கள் (சிப்பந்திகள்) இவ்வாறு பயணிகள் சேவையில் ஈடுபடுவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த கப்பல் இந்தியாவில் இருந்து அம்பாந்தோட்டை, திருகோணமலை வழியாக காங்கேசன் துறைமுகத்திற்கு நாளையதினம் வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, இந்த கப்பல் கடந்த ஆண்டுகளில் – 2023ஆம் ஆண்டு 9 தடவைகள், 2024ஆம் ஆண்டு 6 தடவைகள் – இலங்கைக்கு வந்திருந்தது. இவ்வாண்டு, 15 மற்றும் 22 ஆம் திகதிகளில் இரண்டு தடவைகள் வருகை தரவுள்ளதாக அத்தியட்சர் கூறியுள்ளார்.
(யாழ் நிருபர்-கஜிந்தன்)








