புங்குடுதீவு தனியார் போக்குவரத்து சங்கத்தினர் இன்றையதினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுத்த கொடியை பறக்கவிட்டு, பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 10/08/2025 அன்று தனது வீட்டில் இருந்தவேளை வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட ஐயாத்துரை அற்புதராசா(அகிலன்) அவர்களின் கொலைக்கு நீதிவேண்டியும் கொலையாளிகளை விரைந்து கைதுசெய்யக்கோரியும் இந்த போராட்டம் இரண்டு மணிநேரம் இடம்பெற்றது.
இதனால் புங்குடுதீவு – யாழ்பாணம் இடையேயான போக்குவரத்து சேவைகள் இன்றையதினம் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


(யாழ் நிருபர்- கஜிந்தன்)








