பெல்லன்வில எசல பெரஹெராவின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சிறப்பு நினைவு முத்திரை மற்றும் நினைவு அட்டை சமீபத்தில் பெல்லன்வில ராஜமகா விஹாரையில் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை பெல்லன்வில ராஜமகா விஹாரையின் தலைவர் கலாநிதி பெல்லன்வில தம்மரதன நாயக்க தேரர் தலைமையிலேயே நடத்தியுள்ளனர்.
1950 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பெல்லன்வில எசல பெரஹெரா நாட்டின் வரலாற்றிற்கு பெரும் மதிப்பூட்டும் நிகழ்ச்சி எனவும், கலாசாரத்தின் முக்கிய அங்கமாகும் என்றும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இந்த ஆண்டு, ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 17 வரை நிகழ்கின்ற பெரஹெராவில், ஆகஸ்ட் 16ஆம் திகதி இரவு சிவிமஹா தேவால பெரஹெராவுடன் கண்கவர் ரந்தோலி பெரஹெரா வீதிகளில் வலம் வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. பெரஹெரா நிறைவடையும் நாள் ஆகஸ்ட் 17 ஆகும்.
அஞ்சல் துறைத் தலைவர்கள் மற்றும் ஊழியர்கள் முத்திரை சேகரிப்பை ஊக்குவிக்கும் சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்வில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுனாராச்சி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) சம்பத் துய்யகொண்ட, பிரதி தபால் மா அதிபர் (செயல்பாடுகள்) சட்டத்தரணி பிரேமச்சந்திர ஹேரத், பிரதி தபால் மா அதிபர் (பஸ்னஹிர தெற்கு) நீலங்க சந்தனாரச்சி, பிரேமசந்திர, கெஸ்பேவ பிரதேச செயலாளர் இத்தேமு, பொடாவ பிரதேச செயலாளர் நிஷாந்த வெதமுல்ல, தெஹிவளை கல்கிசை மேயர் பறகும் சாந்த, பெல்லன்வில எசல பெரஹெர கமிட்டி தலைவரும் புரவலருமான மஹிந்த மதீஹஹேவா, பெல்லன்வில எசல பெரஹெரா குழுவின் தலைவர் எச்.டி.பிரேமசிறி மற்றும் ஐயப்பன் குழுவினர் கலந்துகொண்டனர்.







