பெரும்போக விவசாயத்தில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்வதற்காக குழு ஒன்றை அமைக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், கடந்த 2025 பெப்ரவரி மாதம் உள்ளிட்ட காலப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தினால் சுமார் 83,252 ஏக்கர் நிலம் பாதிக்கப்பட்டதுடன், 70,540 விவசாயிகள் பாதிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டினார்.

எனினும், கிளிநொச்சி மாவட்ட விவசாயிகளுக்கு இதுவரை நட்டஈடு வழங்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், கிளிநொச்சி மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு 27 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் லால் காந்த நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here