கொழும்பு முகத்துவாரம் பகுதியில் உள்ள வாகன தரிப்பிடத்திலிருந்து 10 கைக்குண்டுகள் அடங்கிய பை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த பை, முகத்துவாரம் காவல் நிலையத்திற்கு அருகிலுள்ள பகுதியில் இருந்த வாகன தரிப்பிடத்தில் உள்ளதாகக் காணப்பட்டு, உடனடியாக பயங்கரவாத விசாரணை பிரிவின் (TID) அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
அவர்கள் மேற்கொண்ட சோதனையிலேயே பையின் உள்ளே 10 கைக்குண்டுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, தற்போது சம்பவ இடத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இச்சம்பவம், அந்த பகுதியில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பையை அந்த இடத்தில் எவர்கள் விட்டு சென்றார்கள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள நோக்கங்கள் என்ன என்பது தொடர்பில் பாதுகாப்பு பிரிவுகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.








