ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, தனது பயணத்தை முடித்துக்கொண்டு இன்று (10) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜப்பான் பயணத்திற்கு முன், ஜனாதிபதி அமெரிக்காவில் நடைபெற்ற 80வது ஐக்கிய நாடுகள் சபை பொதுச் சபை அமர்வில் கலந்து கொண்டார்.

அவருடன் வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா மேம்பாட்டு அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் பல  அரசு அதிகாரிகளும் வந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here