உலக மது ஒழிப்பு தினத்தையொட்டி, நாளை (அக்டோபர் 3) நாடு முழுவதும் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள் மூடப்படும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் ரோஷன் பெரேரா வெளியிட்டுள்ள அறிவிப்பின் பேரில், இந்த நாளில் எந்தவிதமான மதுபான விற்பனையும் சட்டத்தின்படி தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்த விதிமுறையை மீறி செயல்படும் விற்பனை நிலைய உரிமையாளர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
உலக மது ஒழிப்பு தினமான அக்டோபர் 3, ஆண்டுதோறும் சமூகத்தில் மதுவினால் ஏற்படும் பாதிப்புகளை நினைவுபடுத்தும் நாளாக அனுசரிக்கப்படுகிறது.








