மஸ்கெலியா பெருந்தோட்ட நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நல்லதண்ணி, லக்ஷபான தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் இன்று (09) அதிகாலை 1 மணியளவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
தேயிலை தூள் உற்பத்திப் பிரிவில் ஆரம்பமான தீ, தேயிலை இலைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்த அறைக்கும் பரவியதால், பொட்டலம் கட்டப்பட்ட தேயிலைத் தூளும் பெருமளவில் எரிந்து நாசமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ பரவியதை தோட்ட மக்கள் தாமாகவே கட்டுப்படுத்தியதால், மேலும் சேதம் ஏற்படாமல் தடுக்கப்பட்டது. இருப்பினும், தீயை திட்டமிட்டு மூட்டியதாக தோட்ட நிர்வாகத்துக்கு எதிராக பொதுமக்கள் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தீயினால் ஏற்பட்ட சேதத்தின் அளவு இதுவரை மதிப்பிடப்படவில்லை. யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், தீ விபத்துக்குப் பிறகு தொழிற்சாலையின் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நல்லதண்ணி பொலிஸார் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







