மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தின் புதிய மேலதிக ஆணையாளர் நாயகராக கே.பி.என். தாரக நிரோஷன் தேவப்பிரிய நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (30) தனது புதிய பொறுப்புகளை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார்.

இந்த பதவி புதிதாக உருவாக்கப்பட்ட மேலதிக ஆணையாளர் நாயக பதவியாகும். இதனால், இந்தப் பதவியை வகிக்கும் முதலாவது அதிகாரியாக தாரக நிரோஷன் தேவப்பிரிய வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரியான தேவப்பிரிய, 2003 ஆம் ஆண்டு நிர்வாக சேவை குழுவின் உறுப்பினராக அரச சேவையில் இணைந்தார்.

அவர் தனது சேவைக் காலத்தில் நிதி அமைச்சு, சுங்கத் திணைக்களம் உள்ளிட்ட பல முக்கிய அரச நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார்.

மேலும், இந்த நியமனத்திற்கு முன்னர் அவர் கல்வி அமைச்சில் சிரேஷ்ட உதவிச் செயலாளராக பணியாற்றி வந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here