இலங்கை அரசாங்கத்தின் சேவைகளுக்கான டிஜிட்டல் கட்டண தளம் ‘GovPay’, குடிமக்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு பல்வேறு அரச சேவைகளுக்கான கட்டணங்களை பாதுகாப்பாகவும் எளிதாகவும் ஆன்லைனில் செலுத்தும் வாய்ப்பை வழங்குகிறது.

இந்த தளம் வழியாக வரிகள், அபராதங்கள், பயன்பாட்டு கட்டணங்கள், கல்விக் கட்டணங்கள் உள்ளிட்ட பல சேவைகளுக்கான பணம் வங்கிகள் அல்லது டிஜிட்டல் பணப்பைகள் மூலம் செலுத்த முடிகிறது.

இன்றுவரை GovPay மூலமாக 37,715 பரிவர்த்தனைகள் மூலம் மொத்தம் ரூ. 568,666,330 பெறுமதியான அரச நிதி பரிவர்த்தனைகள் இடம்பெற்றுள்ளன. தற்போது 184 அரச நிறுவனங்கள் இந்த அமைப்புடன் இணைந்துள்ளன.

GovPay திட்டம், இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையம் (ICTA) மற்றும் இலங்கை மத்திய வங்கி (CBSL) ஆகியவற்றின் மேற்பார்வையின் கீழ் செயல்படும் LankaPay தேசிய கொடுப்பனவு வலையமைப்பால் இயக்கப்படுகிறது.

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்ட இந்த தளம், அரச நிதிப் பரிவர்த்தனைகளில் துல்லியம், பாதுகாப்பு, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தி, வருவாய் சேகரிப்பு முறைகளை நவீனப்படுத்துகிறது.

மேலும், அரச நிறுவனங்களுடனான நிதி தொடர்புகளை மின்-ஆளுகை முறையில் முறைப்படுத்துவதன் மூலம், இலங்கையின் டிஜிட்டல் மாற்ற முயற்சிகளில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

ஜனாதிபதி மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சர் அனுர குமார திசாநாயக்க தலைமையில், GovPay தளம் 2025 பிப்ரவரி மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பல கட்டங்களாக முன்னெடுக்கப்படும் தேசிய திட்டமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here