பம்பலப்பிட்டிய மெரின் வீதியில் கார்கள் மீது லொறியொன்று மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் ஐந்து பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த  விபத்து இன்று (06) அதிகாலை 2:30 மணியளவில் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் மீது லொறியொன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பம்பலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளவத்தையிலிருந்து கொள்ளுப்பிட்டி நோக்கிச் சென்ற லொறி இரண்டு கார்களுடன் மோதியதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் லொறி, தொடருந்து பாதையை நோக்கிச் சென்று தொடருந்து தண்டவாளத்தில் நின்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here