அமெரிக்கத் தாக்குதலில் காயமடைந்து, இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டு இலங்கையில் தற்காலிகமாக வைக்கப்பட்டிருந்த மொத்தம் 238 ஈரானியர்கள், நேற்று இரவு (14) ஒரு விசேட விமானம் மூலம் ஈரானுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
மெராஜ் ஏர் லைன்ஸின் ஈரான்-09 என்ற ஈரானின் விசேட விமானம்,நேற்று ஏப்ரல் 14 அன்று மாலை சுமார் 4.00 மணியளவில் இலங்கை விமானப்படைத் தளத்தை வந்தடைந்தது.
அதனைத் தொடர்ந்து, வெலிசர தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டிருந்த 206 ஈரானியர்களும், கொக்கல தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டிருந்த மேலும் 38 ஈரானியர்களும் பாதுகாப்பு ஏற்பாடுகளின் கீழ் விமானத்திற்கு மாற்றப்பட்டனர்.
இந்தக் குழுவினரை ஏற்றிச் சென்ற விசேட விமானம், ஏப்ரல் 14 அன்று இரவு சுமார் 8.35 மணியளவில் கட்டுநாயக்க விமானப்படைத் தளத்திலிருந்து ஈரானுக்கு புறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.








