ஆப்கானிஸ்தானில் உயர்மட்ட அதிகாரிகள் முதல் சேவைப் பணியாளர்கள் வரை அனைத்து அரச அதிகாரிகளுக்கும் ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த தலிபான்கள் முழுமையான தடை விதித்துள்ளனர்.

ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்த அனுமதி இல்லை எனவும் தடையை மீறினால், கைபேசி உடைக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் சட்ட மற்றும் ஷரியா தண்டனை வழங்கப்படும் என்றும் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதாவின் எழுத்துப்பூர்வ உத்தரவின் பேரில் மட்டுமே விலக்கு அளிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது தற்காலிகமான முறையில் இந்த உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ளது எனவும் சில பகுதிகளில் அதிகாரிகள் மட்டுமே இலக்காக உள்ளனர், ஏனைய பகுதிகளில் பெண்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், மருத்துவப் பணியாளர்கள் வரை இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

குறித்த தடை ,அதிகாரிகள் ஆவணங்கள்/கூட்டங்களைப் புகைப்படம் எடுத்து, அனுமதி பெறுவதற்கு முன்பே அவற்றைப் பகிர்தல், அதிகாரிகள் இணையத்தில் நேரத்தை வீணடித்தல் போன்ற காரணங்களால் விதிக்கப்படுவதாக தலிபான்கள்குறிப்பிட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here