கடந்தகாலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு கட்சி முன்னேறும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தங்காலையில் உள்ள கார்டன் இல்லத்தில் நடைபெற்ற புத்தாண்டு நிகழ்வில் பங்கேற்ற பின்னர் ஊடகங்களிடம் பேசியபோது அவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.

புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்த நாமல், சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு என்பது பாதுகாக்கப்பட்டு வருங்கால சந்ததியினருக்குக் கடத்தப்பட வேண்டிய பண்பாட்டுப் பாரம்பரியம் என்று கூயுள்ளார்.

அத்துடன் நாடு ஒரு சவாலான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளது என்றும், ஆனால் ஒற்றுமை மற்றும் நேர்மறையான கண்ணோட்டத்துடன் அவற்றுக்கு முகம் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவம் அவர் தெரிவித்தார்.

“அனைவரும் தவறுகள் செய்வதை நாம் புரிந்துகொண்டு, அவற்றிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும்,” என்று கூறிய அவர், பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாக்கும் அதே வேளையில், சமூகம் கடந்தகாலத் தவறுகளை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இளைஞர்கள் மீதான நம்பிக்கை குறைந்து வருவது குறித்த கவலை அதிகரித்து வருவதாகக் கூறிய நாமல், இளைய தலைமுறைக்கு வழிகாட்டுவதன் முக்கியத்துவத்தையும், தேசிய அபிவிருத்திக்கு அவர்கள் பங்களிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதன் முக்கியத்துவத்தையும் மேலும் எடுத்துரைத்தார்.

நாட்டின் வரலாற்றில் நிகழ்ந்த பல்வேறு அமைதியின்மைக் காலகட்டங்களைக் குறிப்பிட்ட அவர், தனிப்பட்ட சம்பவங்களைக் கொண்டு ஒட்டுமொத்த இளைஞர் சமுதாயத்தையும் மதிப்பிடக் கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here