காலி சிறைச்சாலையிலிருந்து, இன்று மாலை தப்பிச் செல்ல முயன்ற இரண்டு கைதிகள் மீது சிறை அதிகாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், கைதி ஒருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த இரண்டு கைதிகளும் சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது, ​​அவர்களைத் தடுப்பதற்காக துப்பாக்கிச் சூடு அதிகாரிகள் நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் ஒரு கைதி காயமடைந்த நிலையில், மற்றொருவர் சிறை அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த கைதியின் இடது தோள்பட்டையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்துள்ளதோடு அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here