அரசு அலுவலகங்கள், அரசுத்துறை சார்ந்த கட்டிடங்கள் சகலவற்றிலும் முதல்வர் விஜய்யின் ஒளிப்படத்தை (புகைப்படம்)வைப்பது கட்டாயம் என தமிழ்நாட்டு அரசாங்கம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “முதல்வர் விஜய்யின் அங்கீகரிக்கப்பட்ட ஒளிப்படம் சகல அரசு அலுவலகங்கள், தமிழ்நாடு அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், தமிழ்நாடு அரசின் தன்னாட்சி அமைப்புகள், ஏனைய அரசு கட்டடங்களில் உரிய முறையில் காட்சிப்படுத்தபட வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காட்சிப்படுத்தப்பட வேண்டிய முதல்வரின் ‘அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ ஒளிப்படம்’ தற்போது குறித்த செய்தி பிரிவால் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த ஒளிப்படம் சகல அரச துறைகளுக்கும் உரிய முறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.







