கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், இழுவலை மீன்பிடி முறையைத் தடை செய்யுமாறு தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜயிடம் நேற்று (மே 14) வேண்டுகோள் முன்வைத்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் அழிவுகரமான இழுவலை மீன்பிடி முறை தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் பேச்சுவார்த்தைகள் மற்றும் இராஜதந்திர வழிகள் மூலம் மீன்பிடி மோதலைத் தீர்க்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ள அவர், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரைச் சந்திக்க விரும்புவதாகவும் கூறியுள்ளார் என ‘தி ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.







