ரோமானியாவில் வேலைவாய்ப்புகளை பெற்று தருவதாக உறுதியளித்து தனிநபர்களை ஏமாற்றியதாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரைக் கைது செய்ய காவல்துறை பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது.
ரெயின்போ கார்மென்ட்ஸ் டெக்னொலஜிஸ் என்ற நிறுவனம் மூலமாக குறைந்தது 750 நபர்களை ஏமாற்றி, இந்தத் திட்டத்தின் மூலம் கிட்டத்தட்ட ரூ. 920 மில்லியனைப் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் பிரிவு மற்றும் வர்த்தக குற்றத் தடுப்பு பிரிவு ஆகியன இணைந்து விசாரணையைத் தொடங்கியுள்ளன.
இதற்கமைவாக,ஹோமாகமவைச் சேர்ந்த 54 வயதான ஷெர்லி ஜெயவர்தன அமடோரு பிரதான சந்தேக நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் அந்த நிறுவனத்தின் இயக்குநராக இருக்கலாம் என நம்பப்படுகிறது. அவர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சந்தேக நபர் குறித்த தகவல் தெரிந்த எவரும் 071-8594910 அல்லது 011-2444172 என்ற எண்களில் காவல்துறையைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.








