ஹட்டன், டிக்கோயா நகர் பகுதி வர்த்தக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த முக்கிய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் பொகவந்தலாவை பெற்றசோ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கமைய இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேகம் நபரிடம் இருந்து தங்க நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த நபர் விசாரணைக்காக ஹட்டன் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமையன்று டிக்கோயா பகுதி வர்த்தக நிலையமொன்றில் இருந்த தம்பதியரை கொலை செய்து அவர்களிடம் இருந்து தங்க நகைகளை களவாடி சென்ற சம்பவம் தொடர்பில் குறித்த சந்தேக நபர் தேடப்பட்டு வந்தார்.

சந்தேக நபர் தொடர்பிலான cctv காட்சிகள் பொலிஸாரினால்  வெளியிடப்பட்டிருந்தாமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here